3 புதிய சூப்பர் பைக்குகளை ரிலீஸ் செய்யும் ஹீரோவின் பார்ட்னர்!

ஹோண்டா பிரிந்தபின் அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோ கார்ப் ஒப்பந்தம் செய்தது. மேலும், புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை எரிக் புயெல் தொழில்நுட்ப உதவியுடன் ஹீரோ வடிவமைத்து வருகிறது.
புதிய 250சிசி பைக்கை அறிமுகம் செய்யப்பட உள்ளதையும் ஹீரோ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் வடிவமைப்புக்காக ஹீரோவின் டிசைன் எஞ்சினியர்கள் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு எரிக் புயெல் நிறுவனத்தின் டிசைன் எஞ்சினியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், எரிக் புயெல் நிறுவனம் 3 புதிய சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. 1125சிசி வி-ட்வின் எஞ்சினுடன் இந்த புதிய சூப்பர் பைக்குகளை எரிக் புயெல் வடிவமைத்து வருகிறது.
இந்த புதிய சூப்பர் பைக்குகள் வடிவமைப்பில் ஹீரோவின் டிசைன் எஞ்சினியர்களும் சில தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எரிக் புயெல் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலீடு செய்தபின் இந்த புதிய சூப்பர் பைக்குகள் வர இருக்கின்றன.
2014ம் ஆண்டில் இந்த மூன்று புதிய சூப்பர் பைக்குகளை எரிக் புயெல் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான விலையில் இந்த புதிய சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சூப்பர் பைக்குகள் மற்றொரு அமெரிக்க பிராண்டான ஹார்லி டேவிட்சனின் தயாரிப்புகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த புதிய சூப்பர் பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோகார்ப் வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








