ஹீரோ பார்ட்னர் எரிக் புயெலின் புதிய சூப்பர் பைக் அறிமுகம் - விபரம்

By Saravana

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய எரிக் புயெலின் புதிய சூப்பர் பைக் அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. 1190ஆர்எக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய பைக் எரிக் புயெல் 1190ஆர்எஸ் பைக்கின் சிறப்பு பதிப்பு மாடலாகவும், அதைவிட குறைந்த விலையிலும் வந்துள்ளது.

அமெரிக்க மார்க்கெட்டில் டுகாட்டி 1190 பனிகேல் மற்றும் கவாஸாகி நின்ஜா சூப்பர் பைக்குகளுடன் போட்டியிட தயாராகிவிட்ட இந்த புதிய பைக் உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் களமிறக்கப்பட உள்ளதாக எரிக் புயெல் தெரிவித்துள்ளது. அம்சங்கள், விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய இபிஆர் 1190 ஆர்எக்ஸ் பைக்கில் 185 எச்பி ஆற்றலையும், 137.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1190சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

எடை

எடை

விலை குறைப்புக்காக கார்பன் ஃபைபர் பயன்படுத்தாதபோதிலும் எரிபொருள் இல்லாத நிலையில், வெறும் 190 கிலோ எடை மட்டுமே கொண்டதாக இருக்கிறது இந்த புதிய சூப்பர் பைக்.

அம்சங்கள்

அம்சங்கள்

டுகாட்டி 1190 பனிகேல் போன்றே இந்த பைக்கிலும் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எல்இடி ஹெட்லைட், 21 செட்டிங் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் உண்டு.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறம் ஷோவா பிக் பிஸ்டனுடன் கூடிய போர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா மோனோ ஷாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிரேக்

பிரேக்

இபிஆர் 1190ஆர்எக்ஸ் பைக்கில் இசட்டிஎல் சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் இபிஆர் 1190ஆர்எக்ஸ் பைக் கிடைக்கும்.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.11,72,371 விலையில் புதிய எரிக் புயெல் 1190ஆர்எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2013, 11:12 [IST]
English summary
Erik Buell Racing unveiled its new EBR 1190RX superbike at the 2013 AIMExpo in Orlando, U.S.A on October 16. The 1190RX is a long awaited and affordable version of the premium limited production 1190RS. The 1190X is a remarkable motorcycle which is expected to challenge the currently popular European and Japanese liter Class bikes in the U.S such as the Ducati 1190 Panigale and the Kawasaki Ninja.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+