அடுத்த மாதம் புதிய ரேஸ் பைக்கை களமிறக்கும் ஹீரோ பார்ட்னர்!
அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய ரேஸ் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பார்ட்னரான எரிக் புயெல் ரேஸிங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இபிஆர் 1190ஆர்எஸ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இபிஆர் 1190ஆர்எக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த புதிய ரேஸ் பைக் ஏஎம்ஏ சாம்பியன்ஷிப் போட்டிகளில் களமிறங்க உள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டீசர் படம்
எரிக் புயெல் ரேஸிங் நிறுவனம் வெளியிட்ட இபிஆர் 1190ஆர்எக்ஸ் பைக்கின் டீசர் படம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்த பைக் பற்றிய கூடுதல் தகவல்களை காணலாம். வரும் ஸ்லைடுகளில் 1190ஆர்எஸ் பைக்கின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கார்பன் ஃபைபர் ஃபேரிங்
கார்பன் ஃபைபராலான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, இலகு எடை கொண்ட அலுமினியம் வீல்களை கொண்டிருக்கிறது.

அம்சங்கள்
1190ஆர்எஸ் போன்ற இந்த பைக்கிலும் ஃப்ரேமில் இணைந்த பெட்ரோல் டேங்க், வீல்களுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின்
இந்த பைக்கில் 1190 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்
175 எச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்
அக்டோபர் 16ந் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ள ஏஐஎம் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ரேஸ் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








