செம அசத்தலான ஆல் இன் ஆல் அழகுராஜா எலக்ட்ரிக் சைக்கிள்!!
அனைத்து சாலைநிலைகளுக்கும் ஏற்ற எலக்ட்ரிக் சைக்கிளை ரிமாக் ஆட்டோமொபைல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஜி12 கிரேப் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதுடன், நகர்ப்புறம் மற்றும் மவுன்டெயின் சைக்கிளாகவும் பயன்படுத்தும் அம்சங்களுடன் வந்துள்ளது.
உலகின் அதிசக்தி வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் ரிமாக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு என்ற கூடுதல் பலத்துடன் வந்திருக்கும் இந்த சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி
ஜி12 எலக்ட்ரிக் சைக்கிளில் 16 எச்பி ஆற்றலை அளிக்கும் 12 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. லித்தியம் -நானோ பாஸ்பேட் செல்கள் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. உலகின் சிறப்பான செயல்பாடு கொண்ட பேட்டரியாக இதனை வர்ணிக்கிறது ரிமாக்.

சார்ஜ் நேரம்
இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய 80 நிமிடங்கள் பிடிக்கும்.

பெடலிங்
எலக்ட்ரிக் மோட்டாரை அணைத்து விட்டு பெடல்களை மிதித்துக் கொண்டு சாதாரண சைக்கிள் போலும் ஓட்டிச் செல்ல முடியும்.

பிரேக்
முன்புறம் டியூவல் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் ஆற்றலை பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.

டாப் ஸ்பீடு
ஜி12 எலக்ட்ரிக் சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை பயணிக்க முடியும்.

டிரைவிங் நிலைகள்
ஸ்ட்ரீட்: இந்த ஓட்டுதல் நிலைக்கு எஞ்சினை மாற்றிக் கொண்டால் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். மிக குறைவான ஆற்றலை செலவழிக்கும்.
பவர்: மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்ல முடியும். அதிக ஆற்றல் விரயமாகும்.
ஈக்கோ: பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஆற்றல் சேமிப்பு இரண்டையும் ஒருசேர அளிக்கும்.

சிறப்பு வசதி
இந்த பைக்கில் கைரேகையை வைத்து பூட்டும் வசதி இருக்கிறது. கைரேகையை வைத்து டிரைவிங் நிலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும். கட்டைவிரல் ரேகையை வைத்தால் ஸ்பீடு மோடிலும், ஆட்காட்டி விரலை வைத்தால் ஈக்கோ மோடிலும் மாறிக்கொள்ளும்.

கைரேகை நிபுணன்
மொத்தம் 50 பேரின் கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால், உரிமையாளர் மட்டுமே வேகம் மற்றும் ஓட்டுதல் நேரம் போன்றவற்றை நிர்ணயிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








