அந்திரான ரோட்டில் வசமாக சிக்கிய ஹார்லியின் புதிய 500சிசி பைக்!!
போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் குறைந்த விலையில் புதிய 500சிசி குரூஸர் பைக்கை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதனை ஹார்லியும் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், வட மாநில சாலைகளில் குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் சோதனை செய்யப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. டீம் பிஎச்பி இணையதளத்தை சேர்ந்த ஒருவர் புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை சோதனை செய்தபோது படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

தீவிர சோதனை
குர்கான் - பரீதாபாத் நெடுஞ்சாலையில் இந்த பைக் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலே முக்காடு எதுவும் போடாமல் ஹரியானா தற்காலிக பதிவு எண்ணுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கில் ஹார்லி டேவிட்சன் பேட்ஜ் மட்டுமின்றி ஹார்லி பைக்குகளுக்குரிய எந்தவொரு சிறப்பம்சங்களும் தென்படவில்லை.

ஹார்லியேதான்...
அதேவேளை, மட்கார்டு, இருக்கை, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் உள்ளிட்டவை மூலம் ஹார்லி டேவிட்சன் பைக் என்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 45 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். குரூஸர் ரகத்தில் வருகிறது.

விலை
ரூ.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட உதவி: Team BHP

ஏற்றுமதி திட்டம்
இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த பைக்கை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(படத்தில் ஹார்லி ஸ்போர்ட்ஸ்டெர் பைக்)


Click it and Unblock the Notifications








