500சிசி பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்!
பிரிமியம் பைக் மார்க்கெட்டில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்வதற்கு புதிய 500சிசி பைக்கை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன் இந்த புதிய பைக் மேட் இன் இந்தியா பைக்காகவும் இருக்கும்.
இந்த புதிய குரூஸர் ரக பைக் தற்போது டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வைத்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் உற்பத்தி நிலைக்கு செல்லும் அம்சங்களை கொண்டிருக்கிறது. ஹார்லியை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களின் கனவை இந்த புதிய பைக் நிறைவு செய்யும்.

ஜி பிளாட்ஃபார்ம்
வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கான குறைந்த விலை பைக்குகளுக்கான ஹார்லியின் ஜி பிளாட்ஃபார்மில் இந்த புதிய பைக் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 45 பிஎச்பி ஆற்றலையும், 50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 500சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது ஹார்லியிடம் 883சிசி எஞ்சின்தான் குறைந்த திறன் கொண்டதாக இருந்து வருகிறது.

மேட் இன் இந்தியா
சவாலான விலையில் இறக்குவதற்காக இந்த பைக்கிற்கு பெரும்பாலான பாகங்களை இந்திய சப்ளையர்களிடம் பெற்று அசெம்பிள் செய்ய ஹார்லி திட்டமிட்டுள்ளது.

விலை
இந்த பைக்கை ரூ.4 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர ஹார்லி திட்டமிட்டுள்ளது.

குரூஸர் மார்க்கெட்
பஜாஜ் அவெஞ்சர் ஒரு லட்சத்தையொட்டி விலையிலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் ரூ.1.90 லட்சம் வரையிலான விலையிலும், ஹயோசங் 250 சிசி அக்குய்லா ரூ.2 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஹார்லி ரூ.4 லட்சம் விலையில் இந்த பிரிமியம் குரூஸர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








