ஸ்மார்ட் வசதிகளுடன் வரும் ஸ்பிளென்டர் ஐ - ஸ்மார்ட்!!
காரில் இருப்பது போன்ற புதிய வசதிகளுடன் கூடிய ஸ்பிளென்டர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்பிளென்டர் ஐ -ஸ்மார்ட் என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் வர இருக்கிறது.
சீனாவிலுள்ள மகாவோ நகரில் நடந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டீலர்களுக்கான மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மாநாட்டில் இந்த புதிய ஸ்பிளென்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அடுத்த சில மாதங்களில் வர இருக்கும் இந்த புதிய ஸ்பிளென்டர் பைக் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்பிளென்டர்
உலகின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் என்ற பெருமை ஸ்பிளென்டருக்கு உண்டு. ஹீரோவின் 35 சதவீத மார்க்கெட் பங்களிப்பை ஸ்பிளென்டர் வழங்கி வருகிறது. ஆனால், பஜாஜ் ஆட்டோவின் டிஸ்கவர் பைக்கால் ஸ்பிளென்டருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய வசதிகளுடன் கூடிய ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்டை ஹீரோ களமிறக்க உள்ளது.

ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம்
கார்களில் இருப்பது போன்று எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் ஐஸ்பிளென்டரில் கொடுக்கப்பட உள்ளது. எஞ்சின் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஐட்லிங்கில் இருக்கும்போது எஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும். ஆக்சிலேட்டரை கொடுத்தால் எஞ்சின் மீண்டும் உயிர்பெற்றுவிடும். இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும் என்பதோடு, கார்பன் புகை வெளிப்பாடும் குறையும். உயர் ரக கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களில் இந்த வகை மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் என்று அழைக்கப்படும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் இருக்கிறது. ஐஸ்பிளென்டரை தொடர்ந்து பிற மாடல்களிலும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின் இம்மொபைலைசர்
புதிதாக வர இருக்கும் எக்ஸ்ட்ரீம் 150சிசி பைக்கில் எலக்ட்ரானிக் இம்மொபைலைசர் சிஸ்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், சரியான சாவி இல்லாமல் எஞ்சினை இயக்க முடியாது.

ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம்
இன்டகிரேடட் பிரேக்கிங் சிஸ்டம்(ஐபிஎஸ்) எனப்படும் ஒருங்கிணைந்த பிரேக் தொழில்நுட்பம் பிளஷர் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட உள்ளது.. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இரண்டு சக்கரங்களின் பிரேக்குகளும் ஒரே லிவர் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

ஹீரோ பெருமிதம்
ஹோண்டாவை விட்டு தனியாக பயணம் துவங்கியவுடன் எங்களது எதிர்காலத் திட்டங்கள் பற்றி ஏராளமான கேள்விகள் தொடுக்கப்பட்டன. தனியாக சாதிக்க முடியுமா என்ற கேள்விகள் கூட வந்தன. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எங்களது ஆராய்ச்சி மைய நிபுணர்களின் தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றி இருப்பதாக உணர்கிறேன்," என்று ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








