விரைவில் அறிமுகமாகும் ஹீரோவின் முதல் 250சிசி பைக்
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹீரோ மோட்டோ கார்ப் அறிமுகம் செய்ய உள்ளது.
கரீஷ்மா மற்றும் கரீஷ்மா இசட்எம்ஆர் பைக்குகளை தொடர்ந்து அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் உதவியுடன் இந்த புதிய பைக்கை ஹீரோ உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆளுகையின் கீழ் இருக்கும் இந்த மார்க்கெட்டில் ஹீரோவின் புதிய பைக் நிச்சயம் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
ஏனெனில், புதிய பைக்கை மிக சவாலான விலையில் விற்பனைக்கு விடுவதற்கு ஹீரோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசைன், பெர்ஃபார்மென்ஸ், விலை என அனைத்திலும் தன்னிகரில்லா பைக் மாடலாக இது வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








