புதிய ஸ்டைலில் அறிமுகமாகும் ஹீரோ கரீஷ்மா பைக்

ஹீரோவிடம் இருக்கும் அதிகபட்ச பவர்ஃபுல் மாடல் கரீஷ்மா மட்டுமே. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கொண்ட கரீஷ்மா இசட்எம்ஆர் பைக்கை கடந்த 2009ல் ஹீரோ விற்பனைக்கு கொண்டு வந்தது.
250சிசி செக்மென்ட்டில் கடும் போட்டியும், புதிய மாடல்களும் வந்துவிட்டதால், கரீஷ்மா மதிப்பிழந்துவிட்டது.
இந்த நிலையில், புதிய கரீஷ்மாவை அறிமுகப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
புதிய கரீஷ்மா டிசைனில் முற்றிலும் புதியதாக இருக்குமா அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறதா என்பது குறித்து தகவல் இல்லை.
மேம்படுத்தப்பட்ட மாடலாக இருந்தாலும், பெரிய அளவில் மாற்றங்களுடன்தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
மேலும், ஹோண்டாவின் எஞ்சின் தொழில்நுட்ப உதவியும் அடுத்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய பார்ட்னர்ஷிப்பில் தயாராகும் புதிய எஞ்சினை பொருத்தி வரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
தற்போது புதிய பைக்கின் சோதனை ஓட்டத்தை ஹீரோ ஹோண்டா முக்காடு போட்டு நடத்தி வருகிறது. எனவே, விரைவில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








