புதிய கரிஷ்மா, எக்ஸ்ட்ரீம், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 'ஒரிஜினல்' படங்கள்!!
மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதத்தில் 15 புதிய தயாரிப்புகளை ஹீரோ மோட்டோகார்ப் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், புதிய பிளஷர் ஸ்கூட்டர், ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட், புதிய சிபிஸீ எக்ஸ்ட்ரீம், கரிஷ்மா பைக்குகளும் அடக்கம்.
அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய கரிஷ்மாவை ஹீரோ உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், புதிய கரிஷ்மா, ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் பைக்குளை காண ஆவலுடன் காத்திருக்கும் வாசகர்களுக்கு அந்த படங்களையும், கூடுதல் செய்திகளையும் ஸ்லைடரில் வழங்குகிறோம்.

ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட்
ஸ்பிளென்டர் என்எஸ்எக்ஸ்ஜி பைக்கில்தான் புதிய மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பமான ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ. மேலும், தற்போதைய மாடலையும், புதிய மாடலையும் வேறுபடுத்தும் விதமாக ஸ்டிக்கர் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

எக்ஸ்ட்ரீம்
150சிசி பிரிவிலான எக்ஸ்ட்ரீம் பைக்கும் தோற்றத்தில் நன்கு மாறுபட்டுள்ளது. பின்புற பென்டர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்று மாற்றப்பட்டுள்ளது.

கரிஷ்மா ஆர்
கரிஷ்மா ஆர் பைக்கிலும் பேரிங் பேனல்கள் மற்றும் ஹெட்லைட் ஹவுசிங் டிசைன்கள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறம் தொங்கும் பென்டரும் புதிய டிசைன்தான்.

கரிஷ்மா இசட்எம்ஆர்
ஹீரோ ரசிகர்களின் தாகத்தை தீர்த்து வரும் முக்கிய மாடல் கரிஷ்மா இசட்எம்ஆர். இந்த பைக்கின் டிசைன் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இரட்டை ஹெட்லைட் கொண்டதாகவும், பேரிங் பேனல்கள், பின்புறம் பென்டர் ஆகியவை புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

நீங்க சொல்லுங்க
பழைய கரிஷ்மா இசட்எம்ஆர் அளவுக்கு புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக்கின் தோற்றம் கவர்வதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அது கிடக்கட்டும். உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உண்மையை சொல்லுங்க...


Click it and Unblock the Notifications








