ஒரு ஹோண்டா போனதுக்கு இன்னும் புதிய பார்ட்னர்களை தேடும் ஹீரோ!

By Saravana

"தொழில்நுட்ப பகிர்மானத்துக்காக புதிய நிறுவனங்களை கூட்டணி அமைக்க தொடர்ந்து தேடி வருவதாக நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஹீரோ கூட்டணியிலிருந்து விலகியதையடுத்து, தொழில்நுட்ப உதவி பெறுவதற்காக புதிய நிறுவனங்களுடன் ஹீரோ கூட்டணி அமைத்து வருகிறது. ஹோண்டா கூட்டணியில் இருந்தவரை சர்வதேச அளவில் வர்த்தக விரிவாக்கப் பணிகளை செய்ய இயலாதவாறு முட்டுக்கட்டைகள் இருந்தன.

Hero Splendor

ஆனால், தற்போது சுதந்திர பறவையாகியுள்ள ஹீரோ உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் தடம் பதிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 புதிய மார்க்கெட்டுகளில் களமிறங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு தக்கவாறு தனது தொழில்நுட்ப வலிமையை ஸ்திரமாக்கிக் கொள்ளும் வகையில் அமெரிக்காவின் எரிக் புயெல் உள்பட 3 புதிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில், புதிய கூட்டணி நிறுவனங்களை தொடர்ந்து தேடி வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வர்த்தக இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறியிருப்பதாவது,"

தொழில்நுட்பத்தை பெறுவதற்காக புதிய நிறுவனங்களை தேடும் பணியை நிறுத்தவில்லை. தொடர்ந்து புதிய நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பகிர்மானத்துக்கான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் என்பது பெரிய பிரச்னை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2013, 17:07 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+