அக்டோபரில் 6 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்த ஹீரோ விற்பனை
அக்டோபரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது.
கடந்த மாதம் ஹீரோ நிறுவனம் 6,25,420 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஒரு மாதத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஹீரோ பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 5,29,215 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் எண்ணிக்கையிலான வாகனங்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது.
கடந்த மாதம் சராசரியாக ஒரு வினாடிக்கு 14 இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








