இனி ஹோண்டா ஸ்கூட்டர்கள் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும்
புதிய 'ஈக்கோ' தொழில்நுட்பத்துடன் ஸ்கூட்டர்களின் எஞ்சினை மேம்படுத்தியிருக்கிறது ஹோண்டா. எனவே, இனி தனது ஸ்கூட்டர்கள் லிட்டருக்கு 60 கிமீ வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டின் விற்பனையில் நம்பர் -1 ஆக திகழ்கிறது ஹோண்டா. டியோ, ஆக்டிவா மற்றும் ஏவியேட்டர் என மூன்று ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த மூன்று ஸ்கூட்டர்களிலும் 110 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடல்கள் லிட்டருக்கு அதிகபட்சமாக லிட்டருக்கு 40கிமீ முதல் 45 கிமீ வரை மைலேஜ் தருகின்றன.
மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ஸ்கூட்டர்கள் இதே மைலேஜை தருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது மூன்று ஸ்கூட்டர் மாடல்களை அதிக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது ஹோண்டா.
புதிய ஈக்கோ தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர்களின் எஞ்சின்களின் உள் கட்டமைப்பு மற்றும் பாகங்கள் குறைந்த உராய்வு கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்படுத்தப்பட்ட போதிலும், பெர்ஃபார்மென்சில் எந்த குறையும் இருக்காது.
இதனால், ஹோண்டா ஸ்கூட்டர்கள் இனி 11 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். மேலும், ஏவியேட்டர் ஸ்கூட்டர் 2 புதிய வண்ணங்களிலும், டியோ ஸ்கூட்டர் ஒரு புதிய வண்ணத்திலும்கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆக்டிவாவில் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்படவில்லை.
மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மூலம் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக் கொள்ள முடியும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








