சிபிஆர் 250ஆருக்கு மாற்றாக 300ஆரை அறிமுகப்படுத்திய ஹோண்டா!!
சீனாவில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் வர்த்தக கண்காட்சியில் புதிய சிபிஆர் 300ஆர் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. சிபிஆர் 250ஆர் பைக்குக்கு மாற்றாக வரும் இந்த புதிய பைக் சீன மார்க்கெட்டுக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்கிறது.
எனவே, இந்தியாவிலும் இந்த புதிய பைக் விற்பனைக்கு வர உள்ளது. கவாஸாகி நின்ஜா 300 பைக்குக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய பைக்கின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தாய்லாந்தில் உற்பத்தி
சிபிஆர் 250ஆர் உற்பத்தி செய்யப்படும் அதே தாய்லாந்து ஆலையில்தான் இந்த புதிய பைக்கும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

தோற்ற மாற்றம்
சிபிஆர் 250ஆர் பைக்கைவிட புதிய சிபிஆர் 300ஆர் தோற்றத்தில் இன்னும் அழகு கூடியிருக்கிறது. இரட்டை ஹெட்லைட் முத்தாய்ப்பாக இருப்பதோடு, தோற்றத்தில் மிக முக்கியமான மாற்றம்.

புதிய ஃபேரிங் பேனல்கள்
புதிய ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பது அழகை கூட்டுவதோடு, ஏரோடைனமிக்ஸையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இருக்கையின் அமைப்பும் மிக கூர்மையாக இருப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்
இந்த பைக்கின் எஞ்சின் மற்றும் இதர தகவல்களை இதுவரை ஹோண்டா வெளியிடவில்லை. மற்றொரு ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி நின்ஜா 250ஆருக்கு மாற்றாக நின்ஜா 300 பைக்கை களமிறக்கிய அதே பாணியை பின்பற்றி தற்போது சிபிஆர் 300ஆர் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, கேடிஎம் 390 பைக்குக்கு நேர் போட்டியாக இருக்கும்.
குறிப்பு: கடைசி இரண்டு ஸ்லைடுகளில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








