முதல் 4 மாதங்களில் ஒரு லட்சம் ஹோண்டா ட்ரீம் நியோ பைக்குகள் விற்பனை

By Saravana

பட்ஜெட் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட ஹோண்டா ட்ரீம் நியோ பைக் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு முதல் 4 மாதங்களில் ஒரு லட்சம் ஹோண்டா ட்ரீம் நியோ பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

நகர்ப்புறம், கிராமப்புறம் என பாரபட்சம் இல்லாமல் இந்த பைக்குக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த பைக்கின் விற்பனை ஹோண்டாவுக்கு மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. ஸ்பிளென்டர் மார்க்கெட்டை குறிவைத்து ஹோண்டா களமிறக்கிய இந்த பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ட்வின்ஸ்

ட்வின்ஸ்

ட்ரீம் யுகாவும், நியோவும் இரட்டையர்களாகவே தோற்றமளிக்கின்றன. டைமன்ட் வடிவ ஹெட்லைட், ஏரோடைனமிக் முன்பக்க கவுல் ஆகியவை கூடுதல் கவர்ச்சியை தரும் அம்சங்களாக கூறலாம்.

கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராஃபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள் ட்ரீம் நியோவின் கவர்ச்சியை கூட்டும் வகையில் இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ட்ரீம் யுகா, சிபி ட்விஸ்ட்டர் பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்ரீம் நியோவின் எஞ்சின் 8.25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டாவின் ஈக்கோ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த பைக் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனலாக் மீட்டர்கள் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பார்ப்பதற்கு நாகரீகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

ஷைன், ட்ரீம் யுகா பைக்குகளை போன்றே இந் பைக்கும் சிறப்பான இருக்கை அமைப்பு கொணடது. 2 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும்.

பேட்டரி

பேட்டரி

அவ்வப்போது பராமரிப்பு அவசியமற்ற மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ட்யூப் லெஸ் டயர்

ட்யூப் லெஸ் டயர்

ட்யூப்லெஸ் டயரை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ள முடியும்.

 அலாய் வீல்

அலாய் வீல்

ஸ்போக்ஸ் மற்றும் அலாய் வீல் மாடல்களில் கிடைக்கிறது. 6 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு வண்ணத்தில் சிவப்பு கிராபிக்ஸ் ஸ்டிக்கர், கருப்பு வண்ணத்தில் ஊதா கிராபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்ட இரட்டை வண்ணங்கள் மற்றும் ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மான்சூன் கிரே மெட்டாலிக், மிட்நைட் புளூ மெட்டாலிக், ஆல்ஃபா ரெட் மெட்டாலிக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், ஸ்போக்ஸ் வீல் - ரூ.43,150

கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் - ரூ.44,150

எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் - ரூ.47,240

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2013, 10:10 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+