வீடு தேடி வரப்போகும் ஹோண்டாவின் 'டாக்டர்' ஆக்டிவா சர்வீஸ் திட்டம்

By Saravana

கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் நம்பர் - 1 இடத்தை பிடித்திருப்பது ஹோண்டாவை ஏக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உற்சாகத்துடன் தற்போது ஊரகப் பகுதிகளிலும் தனது வர்த்தகத்தையும், சேவையையும் விரிவுப்படுத்த இருக்கிறது.

மேலும், இருசக்கர வாகன மார்க்கெட்டில் முதல்முறையாக வீடு தேடி வந்து சர்வீஸ் செய்து கொடுக்கும் டாக்டர் ஆக்டிவா என்ற பெயரில் புதிய சேவையையும் துவங்க உள்ளது. இந்த புதுமையான சர்வீஸ் திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று ஹோண்டா நம்புகிறது.

 ஆக்டிவா டாக்டர்

ஆக்டிவா டாக்டர்

வீட்டுக்கே வந்து வாகனத்தை சர்வீஸ் செய்து தரும் வகையிலான இந்த திட்டத்துக்காக, தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட உள்ளது.

ரோமிங் கிடையாது

ரோமிங் கிடையாது

நகரம், கிராமம் என்று பாராமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஆக்டிவா டாக்டர் சேவை திட்டத்தை செயல்படுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களின் பொன்னான நேரம், அலைச்சல் மிச்சமாகும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

 டீலர்களில் டாக்டர்

டீலர்களில் டாக்டர்

ஹோண்டாவின் அனைத்து டீலர்களிலும் ஆக்டிவா டாக்டர் ஸ்கூட்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியில் தகவல் அளித்தால் மெக்கானிட் ஆக்டிவா டாக்டர் ஸ்கூட்டரில் வந்து பழுது நீக்கித் தரும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

ஆனால்...

ஆனால்...

பெரிய அளவிலான பழுதுகளுக்கு சர்வீஸ் மையங்களுக்கு நேரடியாக எடுத்து வர வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், வீட்டிலேயே வாகனத்தை சர்வீஸ் செய்து விட முடியும்.

சேவை துவக்கம்

சேவை துவக்கம்

அடுத்த மாதம் முதல் இந்த சேவையை துவங்க இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2013, 12:33 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+