125சிசி எஞ்சினுடன் வருகிறது புதிய ஹோண்டா ஆக்டிவா!
தீபாவளியையொட்டி பண்டிகை காலத்தில் 125சிசி எஞ்சின் கொண்ட பவர்ஃபுல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாடிக்கையாளர்களின் முதல் ஸ்கூட்டர் சாய்ஸாக இருக்கும் ஹோண்டா ஆக்டிவா தற்போது போட்டியாளர்களின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக சமீபத்தில் குறைந்த விலை கொண்ட ஆக்டிவா ஐ என்ற புதிய ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்தது.

இருப்பினும், சுஸுகி ஆக்செஸ், வெஸ்பா 125 எல்எக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்கள் 125சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த சிறிய நெருக்கடியை எளிதாக தீர்த்துக் கொள்ளும் விதத்தில் 125சிசி எஞ்சினுடன் புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வழக்கம்போல் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








