பறப்பதற்கு ரெடியா? - வாடிக்கையாளர்களிடம் கேட்கும் ஹோண்டா
12ந் தேதி முதல் பறப்பதற்கு தயாரா? என்ற கேள்வியுடன் வண்ணத்துப் பூச்சி போட்ட படம் ஒன்றை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. எனவே, அன்றைய தினம் புதிய தயாரிப்பை ஹோண்டா அறிமுகப்படுத்தப் போவது உறுதியாகியுள்ளது.
25 ஆண்டுகால கூட்டணியாக விளங்கிய ஹீரோ ஹோண்டாவிலிருந்து கழன்று கொண்ட ஹோண்டா இந்திய மார்க்கெட்டில் முதலிடத்தை பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை களமிறக்கி வருகிறது.

இந்த நிலையில், அடுத்து ஓர் புதிய தயாரிப்பை வெளியிட ஹோண்டா ஆயத்தமாகி வருகிறது. ஹோண்டா வெளியிட்டிருக்கும் படத்தை பற்றி ஒரு சிறு விசாரணையை போட்டதில், ஆக்டிவா-ஐ(Activa-i) என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை ஹோண்டா அறிமுகப்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.
மஹிந்திரா டியூரோ, பியாஜியோ வெஸ்பா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் இது புதிய 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்பு. 12ந் தேதி வரை பொறுத்திருப்போம்.


Click it and Unblock the Notifications








