இந்தியாவில் புதிய சிபிஆர் 500ஆர் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
இந்தியாவில் ஹோண்டா சிபிஆர் 500ஆர் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குக்கு இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.
இதனை தக்க வைக்கவும், போட்டியாளர்களை சமாளிக்கவும் புதிய சிபிஆர் 500ஆர் பைக்கோ ஹோண்டா அறிமுகம் செய்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ள இந்த பைக் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய பைக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி தற்போது ஹோண்டா டீலர்ஷிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 47 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சினுடன் வருகிறது. 194 கிலோ எடை கொண்ட இந்த புதிய பைக் மணிக்கு 185 கிமீ வேகம் வரை செல்லத்தக்கதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








