புதிய 250சிசி குரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹயோசங்
ஹயோசங்கின் ஜிவி650 குரூஸர் பைக் இந்திய மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், இதுவரை 1,260 ஜிவி650 குரூஸர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. சிறந்த டிசைன் மற்றும் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜிவி650 வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஹயோசங்- டிஎஸ்கே கூட்டணி அடுத்து புதிய 250சிசி திறன் கொண்ட குரூஸர் பைக்கையும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஹயோசங் ஜிவி250 குரூஸர் பைக்கில் ஆயில் கூல்டு கால் லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 28 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. ரூ.2.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹயோசங் ஜிவி250 குரூஸர் பைக்கின் அழகினை கண்டு ரசிக்க ஸ்லைடருக்கு வாருங்கள்.








Click it and Unblock the Notifications








