அக்டோபரில் அறிமுகமாகிறது குறைந்த விலை ஹயோசங் குரூஸர் பைக்

By Saravana

ஹயோசங் குரூஸர் பைக்குகளுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜிவி650 குரூஸர் மற்றும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அக்குய்லா புரோ ஆகிய ஹயோசங் குரூஸர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், ஜிவி650 பைக்கின் விற்பனை 1,500 நெருங்குகிறது.

சிறந்த டிசைன் மற்றும் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ் ஆகியவை ஹயோசங் குரூஸர் மாடல்களுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.. ஜிவி650 வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஹயோசங்- டிஎஸ்கே கூட்டணி அடுத்து புதிய 250சிசி திறன் கொண்ட குரூஸர் பைக்கையும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. வரும் அக்டோபரில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஹயோசங் ஜிவி250 குரூஸர் பைக்கில் ஆயில் கூல்டு கால் லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

 பவர்

பவர்

இந்த எஞ்சின் 28 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வர இருக்கிறது.

தீபாவளி பரிசு

தீபாவளி பரிசு

தீபாவளிக்கு முன்னதாக இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வர ஹயோசங் - டிஎஸ்கே கூட்டணி முடிவு செய்துள்ளது.

விலை

விலை

ரூ.2.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஷோரூம் முகவரி

சென்னை ஷோரூம் முகவரி

சென்னை, அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தின் பின்புறம், நெல்சன் மாணிக்கம் சாலையில், இலக்கம் 23 என்ற முகவரியில் ஹயோசங் பைக் ஷோரூம் செயல்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2013, 10:47 [IST]
English summary
Following the success of the GV650 cruiser and bike South Korean motorcycle manufacturer Hyosung and its Indian partner DSK Motorwheels have decided to introduce the quarter liter model, GV250 in Indian market by early October.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+