கோவாவில் 2வது பைக் வீக் பைக் திருவிழா பற்றிய விபரங்கள்

By Saravana

இரண்டாமாண்டு இந்தியா பைக் வீக் திருவிழாவிற்கான நிகழ்ச்சி நிரல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் இந்த பைக் திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பைக் பிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் 17, 18 தேதிகளில் கோவாவில் இந்த விழா நடக்கிறது. 70 இஎம்ஜி அமைப்பும், ஃபாக்ஸ் தொலைக்காட்சியும் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளன. அமெரிக்காவின் ஸ்டர்கிஸ் மோட்டார்சைக்கிள் ராலியின் அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் விதவிதமான பைக் மாடல்களின் அணிவகுப்பு, சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அதன் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

குவிந்த பைக் பிரியர்கள்

குவிந்த பைக் பிரியர்கள்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முதலாவாது பைக் வீக் திருவிழாவில் 6,547 பைக் பிரியர்கள் 3,000 பைக்குகளுடன் கலந்து கொண்டனர். இதில், பெண்களும் தங்களது பைக்குகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்த பைக் திருவிழாவிற்காக 3 மேடைகளில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில், பல முன்னணி இசைக் குழுவினர், பொழுதுபோக்கு குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சாகச நிகழ்ச்சி

சாகச நிகழ்ச்சி

பைக் திருவிழாவில் பைக் சாகச நிகழ்ச்சி இல்லாமல் நிறைவு பெறாது. கடந்த ஆண்டு பைக் ஸ்டன்ட் கலைஞர் மேட்டி கிரிஃபினின் பைக் சாகச நிகழ்ச்சி பெரிதும் கவர்ந்தது. அதேபோன்று, 2014 பைக் வீக் திருவிழாவிலும் பைக் ஸ்டன்ட் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பைக் கண்காட்சி

பைக் கண்காட்சி

இந்த திருவிழாவின் ஒருபகுதியாக அரிதான கஸ்டமைஸ் பைக்குகள், புதிய குரூஸர் மற்றும் சூப்பர் பைக்குகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

இந்த விழாவில் புதிய மாடல்கள், பைக்குகளுக்கான புதிய ஆக்சஸெரீஸ்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது பைக் பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிஇஓ கருத்து

சிஇஓ கருத்து

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் 70 இஎம்ஜி அமைப்பின் சிஇஓ மார்டின் டா கோஸ்டா கூறுகையில்," இந்திய பைக் பிரியர்களின் தாகத்தை தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்தியா பைக் வீக் 2014 திருவிழா அமையும். கடந்த ஆண்டு முதலாவது திருவிழாவிற்கு எதிர்பார்த்ததைவிட பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தது. அதேபோன்று, இந்த ஆண்டும் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கஸ்டமைஸ் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்," என்றார்.

கட்டணம்

கட்டணம்

இந்த விழாவில் பங்கேற்பதற்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ந் தேதி வரை முன்பதிவு செய்யும் 1,500 பேருக்கு ஐபிடபிள்யூ டி ஷர்ட்டை பெறும் வாய்ப்பும் உள்ளது. இந்த பைக் திருவிழாவிற்கான டிக்கெட்டுகளை ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூம்களிலும், Bookmyshow.com இணைய தளம் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2013, 13:26 [IST]
English summary

 Dates for the second edition of India's largest biker festival, India Bike Week 2014 have been announced. The event organised by Seventy Event Media Group and FOX Traveller will take place in Goa on January 17 and 18 in 2014. The mega event is expected to attract over 10,000 people from all over the country and from outside of it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+