ஜனவரி 22ல் அறிமுகமாகும் இண்டியன் மோட்டார்சைக்கிள்ஸ்!!
அடுத்த மாதம் 22ந் தேதி இண்டியன் பிரிமியம் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது போலரிஸ் நிறுவனம்.
டெல்லியில் நடைபெறும் விழாவில் இண்டியன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போலரிஸ் தெரிவித்துள்ளது.

இண்டியன் மோட்டார்சைக்கிள்கள் தனி ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளதாக போலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீஃப் கிளாசிக், சீஃப் விண்டேஜ் மற்றும் சீஃப்டெயின் ஆகிய 3 மாடல்களில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இந்த புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கு இண்டியன் மோட்டார்சைக்கிள்கள் நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








