இந்தியாவில் களமிறங்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள்... குழப்பமா?
அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் பதிக்கிறது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் நாடுகளின் தேர்வு பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், விரைவில் இந்தியாவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நேரத்தில் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலகின் முதலிடத்தில் இருந்த இந்தியன் நிறுவனம் மிக தாமதமாக தனது வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த துவங்கியுள்ளது. 1953ல் கடும் நெருக்கடியில் சிக்கிய இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதுமுதல் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் கைகளில் மாறி வருகிறது.
2011ல் போலரிஸ் நிறுவனத்தின் வசம் இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டு சென்றது. இதையடுத்து, தற்போது போலரிஸ் புண்ணியத்தில் தற்போது உலக அளவில் தனது வர்த்தக விரிவாக்கத்தைதுவங்கியிருக்கிறது. இந்தியா தவிரவும், பிரேசில், சீனா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தை துவங்குகிறது இந்தியன் பிராண்டு.
இந்தியாவில் தனது சீஃப் பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியன் பிராண்டு கொண்டு வந்து களமிறக்க உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் பைக்குகளில் 1819சிசி திறன் கொண்ட வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த புதிய எஞ்சின் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த டேடோனா பைக் வார விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2014 சீஃப் மோட்டார்சைக்கிள் டீசர்

2013 சீஃப் கிளாசிக்

2013 சீஃப் கிளாசிக்

2013 சீஃப் டார்க் ஹார்ஸ்

2013 சீஃப் டார்க் ஹார்ஸ்

2013 சீஃப் டார்க் ஹார்ஸ்

2013 சீஃப் டார்க் விண்டேஜ்

2013 சீஃப் விண்டேஜ்

2013 சீஃப் விண்டேஜ்

விண்டேஜ் லிமிடேட் எடிசன்



Click it and Unblock the Notifications








