இண்டியன் மோட்டார்சைக்கிளின் புதிய 'கஸ்டம்' மாடல் அறிமுகம்!
அமெரிக்காவை சேர்ந்த இண்டியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது முதல் கஸ்டம் மோட்டார்சைக்கிளை வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளது.
நியூயார்க் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய கஸ்டம் மோட்டார்சைக்கிள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய கூடுதல் விபரங்கள், படங்கள் ஸ்லைடரில் உள்ளன.

கஸ்டம் மாடல்
Big Chief Custom என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் 2014 சீஃப் கிளாசிக் மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான கஸ்டம் மாடலாகும்.

டிசைனர்
போலரிஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் கிரெக் ப்ரூ இந்த கஸ்டம் மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார்.

தயாரிப்பு
தன்னிடம் உள்ள கஸ்டம் ஆக்சஸெரீஸ்களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய மோட்டார்சைக்கிளை இண்டியன் அறிமுகம் செய்துள்ளது. எனவே, இது தயாரிப்புக்கு செல்லாது.

ஆக்சஸெரீஸ்
முன்புறம் பில்லட் கர்டர் ஃபோர்க்குகள், வித்தியாசமான ஃபென்டர், ஸ்பிரிங் இருக்கை, 23 இஞ்ச் ஸ்போக் வீல்கள் மற்றும் கருப்பு, சிவப்பு நிற கலவை பெயிண்ட்டிங் என பழமையான மோட்டார்சைக்கிள்களின் டிசைனை நினைவூட்டும் வகையிலான பிரத்யேக ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திட்டம்
அடுத்த ஆண்டு நடைபெறும் முக்கிய ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் இந்த மோட்டார்சைக்கிளை பார்வைக்கு வைப்பதற்கு இண்டியன் தாய் நிறுவனமான போலரிஸ் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 22ந் தேதி இந்தியாவில் இண்டியன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








