அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் அந்த நின்ஜா பைக் எது?
அடுத்த வாரம் புதிய கவாஸாகி பிராண்டின் புதிய நின்ஜா பைக் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது எந்த பைக் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.
நின்ஜா ஸீஎக்ஸ் 10ஆர் அல்லது ஸீஎக்ஸ் 14ஆர் ஆகிய இரண்டு பைக் மாடல்களில் ஒன்றை கவாஸாகி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 4ல் இந்த இரண்டில் ஒன்று இந்தியாவில் களமிறக்கப்படுவது உறுதி என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இது...
முதலில் ஸீ எக்ஸ் 10ஆர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து இது...
கொஞ்சம் இடைவெளி விட்டு ஸீஎக்ஸ் 10ஆர் பைக்குக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ கவாஸாகி கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எஞ்சின், பவர்
ஸீஎக்ஸ் 10ஆர் பைக்கில் 998சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 200 எச்பி சக்தியையும், 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

டாப் ஸ்பீடு
இரண்டு பைக்குகளும் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதோடு, மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லத்தக்க அம்சங்கள் கொண்டவை.

இறக்குமதி
இரண்டு பைக் மாடல்களும் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

விலை
ஸீஎக்ஸ் 10 ஆர் மற்றும் ஸீஎக்ஸ் 14ஆர் ஆகிய இரு பைக்குகளும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை வரை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில், இரண்டு மாடல்களும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் விலை குறைவு என்பது முக்கிய விஷயமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








