2 புதிய பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்தது கவாஸாகி
2 புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
நேக்டு ஸ்டைல் டிசைன் கொண்ட கவாஸாகி இசட்1000 மற்றும் ஃபேர்டு வெர்ஷன் கவாஸாகி நின்ஜா 100 ஆகிய இரண்டு மாடல்கள்தான் இன்று விற்பனைக்கு வந்துள்ளன.

இரண்டு பைக்குகளுமே ஒரு லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டவைதான். டிஜிட்டல் ஃபியூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட 1,043சிசி எஞ்சின் 142 பிஎஸ் பவரையும், 111 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
தோற்றத்தில் வேறுபடும் இந்த இரு பைக் மாடல்களிலும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பவர் செலக்ஷன் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இரு மாடல்களுமே ரூ.12.5 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இத்துடன் சேர்த்து மொத்தம் 6 பைக் மாடல்களை இந்தியாவில் கவாஸாகி விற்பனை செய்கிறது. அடுத்த மாதம் புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக கவாஸாகி தெரிவித்துள்ளது. அது கவாஸாகி இசட்800 பைக்காக இருக்கும் என தெரிகிறது.
இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த இரண்டு புதிய பைக்குகளும் டெல்லி மற்றும் புனேயில் உள்ள கவாஸாகியின் பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








