அடுத்த ஆண்டு பைக் விற்பனையை இரட்டிப்பாக்க கவாஸாகி திட்டம்
அடுத்த ஆண்டு பைக் விற்பனையை இரட்டிப்பாக உயர்த்துவதற்கு கவாஸாகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமிருக்கிறது. அந்த வகையில், தற்போது கவாஸாகி கடைசியாக இந்த பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது.

பிரிமியம் பைக் மாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் கவாஸாகி நடப்பாண்டில் 1000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பைக் விற்பனையை இரட்டிப்பாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல் பைக் மாடல்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இரண்டு புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த கவாஸாகி ஜனவரியில் மற்றொரு புதிய மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








