இந்தியாவில் கவாஸாகி நின்ஜா இசட்1000 சூப்பர் பைக்குக்கு முன்பதிவு ஆரம்பம்
மிலன் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மிரட்டலான டிசைன் கொண்ட கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. சுகோமி என்ற ஜப்பானிய மிரட்டல் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த பைக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கவாஸாகி நின்ஜா 1000 பைக்கின் நேக்டு மாடலான இந்த பைக் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஹெட்லைட் டிசைன்
இதர உறுப்புகள் பிற சூப்பர் பைக் மாடல்களை போன்று இருந்தாலும், இந்த பைக்கை வேறுப்படுத்துவது இதன் மிரட்டலான ஹெட்லைட் டிசைன்தான். எல்இடி லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரொம்ப பவர்
140 எச்பி பவரையும், 111 என்எம் டார்க்கையும் வழங்கும் 1043 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலிண்டர்களின் உராய்வுத் தன்மை மிக குறைவாக இருக்கும்.

மேம்பாடு
பல வகைகளில் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சூப்பர் பைக் 221 கிலோ எடை கொண்டது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

முன்பதிவு
இந்த மிரட்டலான புதிய சூப்பர் பைக்குக்கு கவாஸாகி சூப்பர் பைக் டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.12.5 லட்சம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 லட்சத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என டீலர்களில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








