டிச.23ல் இந்தியாவில் அறிமுகமாகும் கவாஸாகியின் புதிய சூப்பர் பைக்!
வரும் 23ந் தேதி இந்தியாவில் கவாஸாகியின் இசட்1000 சூப்பர் பைக் விற்பனைக்கு வருகிறது.
இத்தாலி, மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக் அறிமுகமானது.

இதைத்தொடர்ந்து, வெகு விரைவாகவே இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்கிறது.
மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த சூப்பர் பைக்கில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன.
140 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1,043சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சூப்பர் பைக்குக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








