செம கெத்தான தோற்றத்தில் புதிய கவாஸாகி பைக் அறிமுகம்!
டோக்கியோ மோட்டார் ஷோவில் கவாஸாகியின் நேக்டு ஸ்டைல் டிசைன் கொண்ட புதிய 250சிசி பைக்கை கவாஸாகி பார்வைக்கு வைத்துள்ளது.
இசட்250 என்ற பெயரிலான இந்த புதிய என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் இளைஞர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
நின்ஜா 250 பைக்கின் மறுவடிவமைப்பு பெற்ற மாடல்தான் இந்த புதிய பைக். நேக்டு ஸ்டைல் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. நின்ஜா 300 மற்றும் இசட்1000 ஆகிய பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களில் சிலவற்றை எடுத்து இந்த பைக்கை டிசைன் செய்துள்ளனர்.

எஞ்சின்
இந்த பைக்கின் எஞ்சின் உள்ளிட்டவை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த பைக்கின் 249சிசி எஞ்சின் 33 எச்பி ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

இதர அம்சங்கள்
டைமன்ட் டைப் ஸ்டீல் ஃப்ரேம், முன்புறம் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இந்திய வருகை
இந்தியாவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது இந்த பைக் வருவது உறுதியாகிவிடும்.


Click it and Unblock the Notifications








