கேடிஎம் டியூக் 390 பைக்குக்கு 1,500 பேர் முன்பதிவு: செப்டம்பரில் டெலிவிரி
கேடிஎம் டியூக் 390 மிட் சைஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு இதுவரை 1,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த மாத இறுதி வாரத்திலிருந்து டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பஜாஜ் ஆட்டோவின் புரொபைக்கிங் ஷோரூம் வாயிலாக இந்த பைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1.80 லட்சம் என்ற சவாலான விலையில் வந்ததால், கேடிஎம் டியூக் 200 பைக் போன்றே இதற்கும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக கேடிஎம் டியூக் 390 பைக் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டிருப்பதால், மீண்டும் உற்பத்தி பணிகள் வழக்கம் போல் துவங்கியுள்ளன.
இதையடுத்து, அடுத்த மாத இறுதியிலிருந்து கேடிஎம் டியூக் 390 பைக்கின் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக பஜாஜ் புரோபைக்கிங் பிரிவு துணைத் தலைவர் அமீத் நந்தி தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கேடிஎம் டியூக் 390 பைக்குக்கு 90 நாட்கள் காத்திருப்பு காலம் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








