இந்தியாவில் அறிமுகமாகும் 2 புதிய கேடிஎம் பைக்குகள் பற்றிய விபரம்
கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. கேடிஎம் இந்தியா இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனம் டியூக் 200 மற்றும் டியூக் 390 ஆகிய இரண்டு பைக்குகளும் நேக்டு ஸ்டைல் கொண்டவை. ஆனால், புதிதாக விற்பனைக்கு வரும் 2 புதிய பைக்குகளும் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல்கள்.

டிசைன்
தோற்றத்தில் சீற்றம் கொண்ட இந்த இரு மாடல்களிலும் டியூக் 200 மற்றும் டியூக் 390 பைக்குகளின் எஞ்சின், சேஸீ, சஸ்பென்ஷன், ஸ்விங் ஆர்ம் ஆகியவை எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்
கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் 43 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 372.2சிசி எஞ்சினும், கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் 25 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்
புதிய ஸ்டிக்கர்கள், கூர்மையான பின்புறத் தோற்றம், இரட்டை ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்களுடன் வருகை தருகிறது.

விற்பனை துவக்கம்?
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








