கலக்கலான கருப்பு வண்ணக் கலவையில் கேடிஎம் டியூக் 390 அறிமுகம்
கடந்த ஜூன் மாதம் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு வந்தது. ரூ.1.8 லட்சம் என்ற அறிமுக ஆரம்ப விலை இந்த பைக்குக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
டியூக் 200 பைக்கில் இருக்கும் பல பாகங்களே இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டதால், மிக சவாலான விலையில் கேடிஎம் விற்பனைக்கு விட்டது. வெள்ளை மற்றும் ஆரஞ்ச் நிற கலவையில் தற்போது கேடிஎம் டியூக் 390 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய வண்ணத்தில் கேடிஎம் டியூக் 390 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வண்ணம்
கருப்பு, ஆரஞ்ச் கலவையிலான புதிய வண்ணக் கலவையில் கேடிஎம் டியூக் 390 பைக் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செயய்ப்பட்டுள்ளது.

விரைவில்...
இந்தியாவில் இந்த புதிய கருப்பு நிற கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு பரிசாக இந்த புதிய வண்ணத்தை கேடிஎம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஞ்சின்
கேடிஎம் டியூக் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 375சிசி எஞ்சின் 44 பிஎச்பி ஆற்றலையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்ட இந்த பைக் 130 கிமீ வேகத்தை 11 வினாடிகளுக்குள் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ செல்லத்தக்க ஆற்றல் வாய்ந்தது கேடிஎம் டியூக் 390 பைக்.


Click it and Unblock the Notifications








