அடுத்த ஆண்டு இந்தியாவில் வருகிறது கேடிஎம் ஆர்சி390!
பைக் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. அடுத்த ஆண்டு புத்தம் புதிய ஆர்சி390 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர கேடிஎம் திட்டமிட்டுள்ளது. டியூக் 200 மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ள பஜாஜ் கூட்டாளியான கேடிஎம் தனது கரத்தை இந்தியாவில் வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் 3 புதிய பைக்குகளுமே டியூக் வரிசை போன்று 'ஆர்சி' வரிசையில் வருகிறது. அதாவது, ஆர்சி125, ஆர்சி200 மற்றும் ஆர்சி 390 ஆகியவைதான் அந்த மாடல்கள். வடிவமைப்பில் மாறுபடும் ஆர்சி வரிசை பைக்குகள் டியூக் வரிசை பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்களுடன் தத்தமது ரகத்தில் வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ ஆட்டோஷோவில் இந்த புதிய ஆர்சி வரிசை பைக்குகளை கேடிஎம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.







Click it and Unblock the Notifications








