குட்வுட் விழாவில் வீர தீரம் காட்டிய புதிய கேடிஎம் சூப்பர் பைக்

கடந்த ஆண்டு மிலன் நகரில் நடந்த இஐசிஎம்ஏ பைக் கண்காட்சியில் கேடிஎம் நிறுவனத்தின் புதிய டியூக் 1290ஆர் சூப்பர் பைக் முதன்முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த பைக்கின் வீர தீரங்களை காட்டும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த பைக்கை முன்னாள் மோட்டோஜீபி மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் ஜெர்மி மெக்வில்லியம்ஸ் ஓட்டிக்காட்டி அசத்தினார். டயரிலிருந்து தீப்பொறி பறக்க அவர் ஓட்டிய காட்சிகளை ஸ்லைடரில் காணலாம்.

 ரகசியம்

ரகசியம்

இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை வெளியிடாமல் கேடிஎம் ரகசியமாக காத்து வருகிறது. இந்த பைக்கின் ட்ரெல்லிஸ் ஃபிரேம் குரோம் மாலிபிடினியம் ஸ்டீலில் உருவாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

டபிள்யூபி ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக்குகளை கொண்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய சூப்பர் பைக்கில் லிக்யூடு கூல்டு வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆர்சி8 ஆர் சூப்பர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் அடிப்படையில் இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த சூப்பர் பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 200எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 அறிமுகம்

அறிமுகம்

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய சூப்பர் பைக்கின் உற்பத்தி நிலை மாடல் வெளியுலகுக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 ஜெர்மி புகழாராம்

ஜெர்மி புகழாராம்

மோட்டோஜீபி பைக்குகளுக்கு இணையான அம்சங்களை இந்த பைக் கொண்டிருப்பதாகவும், கையாளுமை, ஓட்டுதல் தரம் என அனைத்திலும் சிறப்பாக இருப்பதாக இந்த பைக்கை ஓட்டிய முன்னாள் மோட்டோஜீபி வீரர் ஜெர்மி புகழாராம் சூட்டியிருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2013, 10:26 [IST]
English summary
Since its first public appearance at the 2012 EICMA in Milan the KTM Super Duke 1290 R has been spotted in the wild a few times and has also been photographed alongside a Patriot Edition during a U.S dealer visit.
மேலும்... #ktm #two wheeler #கேடிஎம்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+