கேடிஎம் சூப்பர் டியூக் 1290ஆர் அறிமுகம் - படங்களுடன் தகவல்கள்
ரசிகர்களின் ஆவலை ஆசுவாசப்படுத்தும் விதமாக தனது புதிய சூப்பர் டியூக்கின் படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது கேடிஎம்.
இத்தாலி, மிலன் ஆட்டோ ஷோவில் விரைவில் முறைப்படி தரிசனம் தர இருக்கும் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்களை கேடிஎம் ரசிகர்களுக்கு விருந்தாக்குகிறோம்.

எது மிஸ்ஸிங்?
கான்செப்ட் நிலை மாடலின் பல்வேறு டிசைன் தாத்பரியங்கள் தயாரிப்பு நிலை மாடலும் தாங்கி வந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இஐசிஎம்ஏ., பைக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடல் அளவுக்கு மிரட்டல் தயாரிப்பு நிலை மாடலில் இல்லை. அதுதான் மிஸ்ஸிங்.

கம்பீரம்
கான்செப்ட் நிலை மாடலின் கூர்மையான ஹெட்லைட்டுகள், தூக்கி நிறுத்தும் பக்கவாட்டு கவுல்கள் ஆகியவற்றில் மாற்றம் இல்லை என்பதால், தயாரிப்பு நிலை மாடலின் கம்பீரம் குறையாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ரன்னிங் விளக்குகள்
ஹெட்லைட்டின் மேற்புறத்தில் பகல் நேர ரன்னிங் விளக்குகள் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமான அம்சம்.

சைலென்சர்
சைலென்சரும் எதிர்பார்த்த அளவு டிசைன் செய்யப்படாததும் குறையே. சாதாரணமாக பயன்படுத்தப்படும் சைலென்சர் வடிவிலேயே இருக்கிறது. இங்கும் சற்று ஏமாற்றமே மிச்சம்.

எஞ்சின்
1,300சிசி திறன் கொண்ட வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 8,870 ஆர்பிஎம்.,மில் 180 எச்பி பவரையும், 2,500 ஆர்பிஎம்.,மில் 100 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த பைக் வெறும் 189 கிலோ கெர்ப் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்ஃபார்மென்ஸ்
டிசைனை விடுங்க. இங்கதான் நாங்க நிற்கிறோம் என்று கேடிஎம் சொல்வது போன்று இதன் பெர்ஃபார்மென்ஸ் இருக்கும். இதன் பெர்ஃபார்மென்ஸ் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், 0- 200 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் தாண்டும் குதிரை இது என்கிறது கேடிஎம் வட்டார தகவல்.

பிரேக்
ரேஸ் பைக்குகளை போன்ற பிரேக் அமைப்பு இதில் பொருத்தப்பட்டிருக்கும் என்று கேடிஎம் தெரிவித்துள்ளது. முன்புறத்தில் 320 மிமீ விட்டம் கொண்ட இரண்டு டிஸ்க்குகளுடன் கூடிய 4 பிஸ்டன் பிரெம்போ காலிபர் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் 2 பிஸ்டன்கள் கொண்ட ஒற்றை பிரெம்போ காலிபர் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதுவும் ஏமாற்றம்
பாஷ் தயாரித்த எம்எஸ்சி என்ற மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம்(MSC) இந்த பைக்கில் இடம்பெறவில்லை. இது கேடிஎம் ரசிகர்களை ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பாஷ் ஏபிஎஸ் சிஸ்டம்
பாஷ் நிறுவனத்தின் சாதாரண 9எம்இ கம்பைன்டு ஏபிஎஸ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது.

டயர்கள்
கேடிஎம் சூப்பர் டியூக் 1290 ஆர் பைக்குக்காக டன்லப் தயாரித்துக் கொடுத்த ஸ்போர்ட்ஸ்மார்ட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறந்த நிலைத்தன்மையுடன் செல்வதற்கும், அதிக சாலை கிரிப் வழங்கும் வகையிலும் இருக்கும்.

ரைடிங் ஆப்ஷன்கள்
கேடிஎம் சூப்பர் டியூக் 1290 ஆர் பைக்கில் 4 விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த ஆப்ஷன்கள் மூலம் சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு எஞ்சின் ஆற்றல் வெளிப்பாடு, டிராக்ஷன் கன்ட்ரோலை மாற்றிக் கொள்ள முடியும்.

அது என்னென்ன?
Rain ஆப்ஷனில் மாற்றிக் கொண்டால் எஞ்சினின் ஆற்றல் வெளிப்பாடு குறைவாக இருக்கும் என்பதோடு, டிராக்ஷன் கன்ட்ரோல் ஒத்துழைப்புடன் பைக் நிலைத்தன்மை அதிகரிக்கும்.
Sport ஆப்ஷனில் ஏபிஎஸ் சிஸ்டத்தின் முழு ஒத்துழைப்பும், எஞ்சினும் தனது சக்தியை முழுமையாக வெளிக்காட்டும்.

டிரிஃப்ட்
டிரிஃப்ட் செய்ய விரும்புபவர்களுக்கு ஏதுவாக பின்புற சக்கரத்தின் ஏபிஎஸ் சிஸ்டத்தை அணைத்துக் கொள்ளும் வசதி உண்டு. நான்காவது வசதியில் எலக்ட்ரானிக் கட்டுப்பாடு அனைத்தும் செயல் இழக்க வைத்துவிட்டு முழுக்க முழுக்க ரைடரின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையிலானது.

சூப்பர் டியூக் சில துளிகள்
சஸ்பென்ஷன்: முன்புற 48மிமீ டபிள்யூபி ஃபோர்க்குகள், பின்புறத்தில் டபிள்யூபி மோனோஷாக் சஸ்பென்ஷன்.
ஃப்ரேம்: குரோமியம் மாலிபிடினம் ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம்
பெட்ரோல் டேங்க்: 18 லிட்டர்கள்
சர்வீஸ் இடைவெளி: 15,000 கிலோமீட்டர்கள்


Click it and Unblock the Notifications








