வண்ணமயமான ஆரஞ்ச் தினத்தில் காட்சி தந்த புதிய கேடிஎம் பைக்

மும்பையில் நடந்த கேடிஎம் நிறுவனத்தின் இரண்டாவது ஆரஞ்ச் தினத்தில் 350 எஸ்எக்ஸ்-எஃப் பைக்கை கேடிஎம் பார்வைக்கு வைத்திருந்தது. மும்பை, மலாடில் உள்ள இன்ஆர்பிட் மால் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் கேடிஎம் பைக் உரிமையாளர்களுக்கான பந்தயம், பைக் ஸ்டன்ட் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன.

பார்வையாளர்களையும், கேடிஎம் உரிமையாளர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த விழாவில் அனைவரையும் கவர்ந்தது என்னவோ 350 எஸ்எக்ஸ்-எஃப் ஆஃப்ரோடு பைக்தான். டியூக் 200 பைக் மூலம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுந்த கேடிஎம் அடுத்து டியூக் 390 பைக்கை களமிறக்க உள்ளது.

இந்தநிலையில், மும்பையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய 350 எஸ்எக்ஸ்-எஃப் சாகச பைக்கையும் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை பஜாஜ்-கேடிஎம் கூட்டணி ஆராய்ந்து வருகிறது. நாடு முழுவதும் பஜாஜ்-கேடிஎம் கூட்டணிக்கு 70 புரொபைக்கிங் ஷோரூம்கள் இருக்கின்றன. அதில், 17 ஷோரூம்களில் இந்த 350 எஸ்எக்ஸ் எஃப் பைக்கையும், ஆர்சி8 என்ற அதிசக்திவாய்ந்த பைக்கையும் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதாக கேடிஎம் நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் அமீத் நந்தி தெரிவித்துள்ளார்.

கேடிஎம் 350 எஸ்எக்ஸ் எஃப்

கேடிஎம் 350 எஸ்எக்ஸ் எஃப்

மும்பையில், மலாடில் உள்ள இன்ஆர்பிட் வணிக வளாகத்தில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினத்தில் பார்வையாளர்களை கவனத்தை கவர்ந்த கேடிஎம் 350 எஸ்எக்ஸ் எஃப் ஆஃப்ரோடு பைக். கேடிஎம் நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் அமீத் நந்தி உரையாற்றுகிறார்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 349.7 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்சை கொண்டிருக்கிறது. 104.8 கிலோ எடைகொண்டது.

கேடிஎம் ஆர்சி8

கேடிஎம் ஆர்சி8

இந்த ரேஸ் பைக் மாடலை நாடு முழுவதும் உள்ள 17 ஷோரூம்களில் விரைவில் பார்வைக்கு வைக்க உள்ளது கேடிஎம். இந்த பைக்கில் 173 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1195 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ரேஸிங் விளையாட்டுகள் மீதான மோகம் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இந்த இரு பைக் மாடல்களையும் கொண்டு வர கேடிஎம் பரிசீலித்து வருகிறது.

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

மும்பையில் நடந்த கேடிஎம் ஆரஞ்ச் தினம்

More from DriveSpark

Article Published On: Monday, February 25, 2013, 16:57 [IST]
English summary
KTM 350 SX-F unveiled in India. KTM 350 SX-F was unveiled at the Orange day in Mumbai this weekend. The bike will soon be displayed at company showrooms in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+