பிக்கப் டிரக் கான்செப்ட்டில் ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
தனிநபர் பயன்பாட்டுக்கான மிகச் சிறந்த ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த லிட் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. குபோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டரை பிக்கப் டிரக்காக லிட் மோட்டார்ஸ் செல்லமாக குறிப்பிடுகிறது.
தயாரிப்பு நிலையை எட்டுவதற்கு முதலீடு வேண்டி அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டரில் இருக்கும் அம்சங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம். வீடியோ இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இடவசதி
இந்த ஸ்கூட்டரில் மிக பாதுகாப்பாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கான இடவசதியும், கொக்கிகளும், வலையும் கொடுக்கப்பட்டுள்ளது.

சுமக்கும் திறன்
இந்த கார்கோ பகுதியில் 136 கிலோ எடையை வைத்து எடுத்துச் செல்ல முடியும் என லிட் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. மேலும், வார இறுதியில் வெளியில் பயணிக்க விரும்புவர்களுக்கும் இது சிறந்த ஸ்கூட்டராக இருக்கும் என தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடம்
இந்த ஸ்கூட்டரில் பூட்டி திறக்கும் வசதி கொண்ட பாதுகாப்பு பெட்டியும் இருக்கிறது. விலை மதிப்புமிக்க பொருட்களை அதில் வைத்துக் கொள்ளலாம்.

எலக்ட்ரிக் வாகனம்
இந்த குபோ ஸ்கூட்டரில் 3 kW திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பமும் இருப்பதால் கூடுதல் தூரம் பயணிக்க ஏதுவாகும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 72.42 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ரேஞ்ச்
இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 80.46 கிமீ தூரம் செல்ல முடியும் என்கிறது லிட் மோட்டார்ஸ்.

சார்ஜர்
இந்த ஸ்கூட்டரில் மொபைல்போன் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி
இந்த ஸ்கூட்டரின் இருக்கையை ஓட்டுபவரின் உயரத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ள முடியும்.

டிஜிட்டல்
டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், பேட்டரி இன்டிகேட்டர், எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை குறிப்பிட்டு கூறும் அம்சங்களாகும்.
வீடியோ
வீடியோவில் குபோ ஸ்கூட்டரின் உபயோகம் விளக்கிக் காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications








