ரூ.49,410 விலையில் மீண்டும் வந்த எல்எம்எல் ஃப்ரீடம்

டூயல் டோன் கலருடன் 5 விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும். ஹெட்லைட் ஸ்கூப் லேசான மாறுதல்களை கண்டுள்ளது. கருப்பு அலாய் வீல்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட், குரோம் பூச்சுடன் சைலன்சர் கார்டு ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். டிஎக்ஸ் மற்றும் எல்எஸ் ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.49,410 விலையிலும், எல்எஸ் வேரியண்ட் ரூ.49,950 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். தற்போது என்சிஆர், பஞ்சாப் மற்றும் கோவாவில் எல்எம்எல் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன.
அங்கு இந்த மோட்டார்சைக்கிள் உடனடியாக கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரீடம் பைக்கை தொடர்ந்து அடுத்து புதிய ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களை களமிறக்க எல்எம்எல் திட்டம் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








