70,000ஐ தாண்டிய செஞ்சூரோ புக்கிங்... தலைகால் புரியாத சந்தோஷத்தில் மஹிந்திரா!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மஹிந்திரா செஞ்சூரோவுக்கு இதுவரை 70,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இது அந்த நிறுவனத்தை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏராளமான புதிய வசதிகள், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலை என்ற அம்சங்களுடன் வந்த செஞ்சூரோவுக்கு இந்தளவு முன்பதிவு கிடைத்துள்ளது போட்டியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது. என்ன நீங்களும் செஞ்சூரோ புக் பண்ண கிளம்பிட்டீங்களா? அதற்கு முன்னர் அந்த பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் பார்த்துவிட்டு செல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.

தென்னகம் பக்கம் கவனம்
மஹிந்திரா செஞ்சூரோவுக்கு கிடைத்த முன்பதிவால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் மஹிந்திரா தென் மாநிலங்களில் டீலர் கட்டமைப்பையும், சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

டீலர் கட்டமைப்பு
அடுத்த நிதி ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 2,000ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர, பல புதிய மாடல்களையும் களமிறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தேட வேண்டாம்
சில சமயம் பார்க்கிங் பகுதிகளில் வண்டியை தேட வேண்டியிருக்கும். அப்போது, வண்டி எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வசதி கொண்ட Find me Lamps கொடுக்கப்பட்டுள்ளது.

கைவிடாத செஞ்சூரோ
இரவில் வண்டியை நிறுத்தியவுடன் சிறிது நேரம் ஒளி தரும் Guide me Home lamps இருக்கிறது.

டிஜிட்டல் மயம்
அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரிமோட் சாவி
கார்களில் இருப்பது போன்று ரிமோட் சாவி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், சிறிய டார்ச் லைட்டும் உள்ளது.

எஞ்சின் அலார்ம்
வண்டி திருட்டுபோவதை எச்சரிக்கை அலாரம் மற்றும் எஞ்சின் இம்மொபைலசர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செஞ்சூரோ எஞ்சின்
110சிசி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செஞ்சூரோவில் 8.5 எச்பி சக்தியையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 106.7சிசி கொண்ட எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்
இந்த பைக் லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் தரும் என மஹிந்திரா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் டேங்க்
இந்த பைக்கில் 12.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட்
எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் மாடல்களில் கிடைக்கிறது.

விலை
இத்துனை வசதிகளுடன் ரூ.45,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செஞ்சூரோ சென்னையில் ரூ.51,278 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








