செஞ்சூரோவுக்கு பெரும் வரவேற்பு... முன்பதிவு 10,000ஐ தாண்டியது
கடந்த 1ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா செஞ்சூரோ பைக்குக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 10,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
கார்களில் இருப்பதுபோன்று ஏராளமான நவீன வசதிகளுடன் செஞ்சூரோ பைக்கை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது. மஹிந்திரா சொந்தமாக உருவாக்கிய எம்சிஐ-5 எஞ்சினுடன் வந்த இந்த புதிய பைக் லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் செல்வதாக அராய் சான்றளித்தது.

மேலும், ரூ.52,000 என்ற ஆன்ரோடு விலையில் வந்ததால், வாடிக்கையாள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு வந்து இதுவரை 3 வாரங்களில் முன்பதிவு 10,000ஐ கடந்துவிட்டதாக மஹிந்திரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








