அமெரிக்காவில் அறிமுகமான மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!
அமெரிக்காவில் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான்டா மோனிகாவில் சமீபத்தில் நடந்த 13வது மாற்று எரிபொருள் வாகன கண்காட்சியான அல்ட்கார் ஷோவில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா ஜென்ஸீ எஸ்டிஎஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள வடிவமைப்பு மையத்தில் உருவாக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டரிலும் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை மஹிந்திரா வழங்கியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
மிக எளிய தோற்றம் கொண்டதாக இருக்கிறது. ஒற்றை இருக்கையுடன், அதற்கு பின்னால் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான சிறிய தொட்டியை கொண்டுள்ளது. சிறிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரொம்ப சிம்பிளான டிசைன்.

தொடுதிரை
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருக்கு பதிலாக 7 இஞ்ச் தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜ், வேகம் உள்ளிட்ட தகவல்களை இதன் மூலமாக பெறலாம். இதில், ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன், ஜிபிஎஸ், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன்களை யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

ரேவா உதவி
இந்த புதிய ஜென்ஸீ ஸ்கூட்டர் வடிவமைப்பில் ரேவா நிறுவனத்தின் பங்களிப்பும், தொழில்நுட்ப உதவியும் இருக்கிறது.

ரேஞ்ச்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும்.

விற்பனை
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த புதிய மஹிந்திரா ஸ்கூட்டர் கலிஃபோர்னியா, புளோரிடா, வர்ஜீனியா, ஒரேகான் ஆகிய மாகாணங்களில் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
3,000 டாலர் விலையில் (இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம்) இந்த புதிய ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் அமெரிக்க மார்க்கெட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








