விரைவில் வரும் மஹிந்திரா மோஜோ - படங்களுடன் ஒரு முன்னோட்டம்
பேண்டீரோ மற்றும் செஞ்சூரோ என்ற இரண்டு புதிய 110சிசி பைக்குகளை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் அடுத்து மோஜோ என்ற புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. 300 சிசி திறன் கொண்ட இந்த பைக் நேக்டு ஸ்டைல் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2010ம் அக்டோபரில் வெளியுலகுக்குக்கு காட்டிய இந்த பைக்கை மஹிந்திரா இதுவரை அறிமுகம் செய்யவில்லை.
முதல் பைக்கான ஸ்டாலியோவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை இந்த பைக்கிலும் வந்துவிடக் கூடாது என்பதால் மோஜோ பைக்கை தற்போது மஹிந்திரா தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. வரும் மார்ச்சில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை மஹிந்திரா மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேக்டு ஸ்டைல் வடிவமைப்பு கொண்ட பைக்குகளை முதன்முறையாக டுகாட்டிதான் மார்க்கெட்டிற்கு அறிமுகம் செய்தது. வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த ரக பைக்குகள் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நேக்டு ஸ்டைல் பைக்குகளின் டிசைன் மீது இந்தியர்களுக்கும் ரசனை அதிகரித்து வருகிறது.

தோற்றம்
இரட்டை ஹெட்லைட்டுகள், வித்தியாசமான ரியர் வியூ மிரர்கள் என வித்தியாசமான வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்டைல் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எஞ்சின்
26 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய பைக்கை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

அம்சங்கள்
டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ரியர் வியூ மிரரில் இண்டிகேட்டர், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் என பலவித நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்
இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 300 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக்கின் எடை 160 கிலோ.

எதிர்பார்க்கும் விலை
ரூ.1.5 லட்சம் விலையில் இந்த புதிய பைக் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்
250 சிசி மார்க்கெட்டில் போட்டிப் போட தயாராகி வரும் இந்த பைக்குக்கு அதிக போட்டியாளர்கள் இல்லை. நின்ஜா 250ஆர், ஹயோசங் ஜிடி 250ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆகிய 3 பைக்குகளை மட்டுமே போட்டியாளர்களாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








