மோஜோ டிசைனை முற்றிலுமாக மாற்றும் மஹிந்திரா

கடந்த 2010ம் ஆண்டு மோஜோ என்ற 300சிசி ஸ்ட்ரீட் பைக்கை மஹிந்திரா பார்வைக்கு அறிமுகம் செய்தது. 2011ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை 3 ஆண்டுகளை கடந்தும் மோஜோ விற்பனை குறித்து மஹிந்திரா வாய் திறக்கவில்லை. ஸ்டாலியோ பைக்கை போன்று தொழில்நுட்ப பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல கட்ட சோதனைகளுக்கு இந்த பைக்கை உட்படுத்தி வருகிறது மஹிந்திரா. இது ஒருபுறம் இருக்க, மோஜோவின் டிசைனும் பார்த்தவர்களை அவ்வளவாக கவரவில்லை.

இதனை தாமதமாக உணர்ந்து கொண்ட மஹிந்திரா தற்போது மோஜோவிற்கு புதிய தோற்றத்தை கொடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல் டேங்க் மற்றும் ஃபேரிங் பேனல்களுடன் மோஜோவை மஹிந்திரா மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஃபேரிங் பேனல்கள்

ஃபேரிங் பேனல்கள்

ஃபேரிங் பேனல்கள் கொண்ட பைக்குகள் கொஞ்சம் அடைப்பாகவும், பாந்தமாகவும் தெரிவதால், நம் நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே, மோஜோவுக்கு ஃபேரிங் பேனல்களை பொருத்த மஹிந்திரா முடிவு செய்துள்ளதாம்.

எஞ்சினிலும் மாற்றமா?

எஞ்சினிலும் மாற்றமா?

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிகிறது. ஏற்கனவே அறிவித்த அதே 292சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 25.8 பிஎச்பி சக்தியை அளிக்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த சக்திவாய்ந்த ஸ்டீரிட் பைக்கின் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டிருக்கும்.

டிஸ்க் பிரேக்குகள்

டிஸ்க் பிரேக்குகள்

பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கும்.

கவருமா?

கவருமா?

மோஜோவின் புதிய டிசைனாவது கவருமா என்ற எதிர்பார்ப்பில் ஆட்டோமொபைல் துறையினர் காத்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2013, 10:07 [IST]
English summary
Mahindra Mojo will be sent back to its design house to make a serious transform in its design.
 
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+