புத்தம் புதிய 110சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் மஹிந்திரா!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புத்தம் புதிய 110சிசி ஸ்கூட்டரை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனம் தற்போது 75சிசி செக்மென்ட்டில் கைன் என்ற ஸ்கூட்டர் மாடலையும், 125 செக்மென்ட்டில் ஃப்ளைட், டியூரோ, ரோடியோ ஆகிய 3 ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், 75 செக்மென்டிற்கும், 125சிசி செக்மென்டிற்குமான இடைவெளியை குறைக்கும் விதத்தில் புதிய 110சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய மாடல்

புதிய மாடல்

ஜி101 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வடிவமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

இந்த ஸ்கூட்டரில் புத்தம் புதிய 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். வழக்கம்போல் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி

போட்டி

ஹோண்டா ஆக்டிவா, யமஹா ரே, டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையிலான அம்சங்கள் மற்றும் விலையுடன் இந்த புதிய ஸ்கூட்டரை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், செஞ்சூரோவில் கொடுக்கப்பட்டது போன்று இந்த ஸ்கூட்டரில் ஏராளமான சிறப்பு வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோஜோ

மோஜோ

இந்த புதிய ஸ்கூட்டருடன் மோஜோவையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. புதிய மோஜோ பைக் டிசைனில் பல்வேறு மாற்றங்களுடன் வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள 10 மாடல்களில் இவை இரண்டும் முதலாவதாக வருகின்றன.

சீரான வளர்ச்சி

சீரான வளர்ச்சி

செஞ்சூரோ மூலம் விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்த போதிலும், சீரான வளர்ச்சியை பெறுவதற்காக ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் கவனம் செலுத்த இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2013, 15:43 [IST]
English summary
The latest report, which cites insider sources, claims that the upcoming Mahindra 110cc segment scooter is code named G101 and will be launched at the India Auto Expo in Feb 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+