புதிய மாடல்களுடன் மீண்டும் பைக் மார்க்கெட்டில் நுழையும் மஹிந்திரா!
புதிய மாடல்களுடன் மீண்டும் பைக் மார்க்கெட்டில் நுழைகிறது மஹிந்திரா. இந்த மாதத்தில் புதிய பைக் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. தொழில்நுட்ப பிரச்னையால் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஸ்டாலியோ பைக்கை தற்போது மேம்படுத்த பேண்டீரோ என்ற பெயரில் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதுதவிர, 300சிசி திறன் கொண்ட மோஜோ என்ற புதிய பைக்கையும் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
கிட்டதட்ட 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்ஸ் பிரச்னைகளை சரிசெய்துள்ளது மஹிந்திரா. 110 சிசி எஞ்சினுடன் வரும் பேண்டீரோவை மார்க்கெட்டில் மீண்டும் நிலைநிறுத்துவதற்கு புதிய வியூகங்களை அமைத்து மஹிந்திரா களமிறங்குகிறது. இந்த இரு பைக் மாடல்களையும் தவிர மேலும் புதிய பைக் மாடல்களையும் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஸ்லைடரில் புதிய பாண்டீரோவின் ஸ்பை படங்கள் மற்றும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மோஜோ பைக்கின் படங்களை காணலாம்.

மஹிந்திரா பேண்டீரோ - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா பேண்டீரோ - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா பேண்டீரோ

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ



Click it and Unblock the Notifications








