இந்தியாவில் புதிய குரூஸர் பைக்கை களமிறக்கும் ஹயோசங்

கொரிய பிராண்டான ஹயோசங் நிறுவனத்தின் தயாரிப்பான அக்குய்லா 650சிசி பைக் இந்திய மார்க்கெட்டிற்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்குய்லா பைக்கை கைனடிக் நிறுவனம் இறக்குமதி செய்து விற்று வந்தது.
ஆனால், விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அப்போது மார்க்கெட்டின் நிலவரமும் அப்படி. இந்த நிலையில், தற்போது தனியாக களமிறங்கியிருக்கும் ஹயோசங் தற்போது எஸ்டி-7 என்ற குரூஸர் பைக்கை விற்பனை செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்கனவே அறிமுகமான அக்குய்லா ஜிவி 650 குரூஸர் பைக்கையும் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 647சிசி திறன் கொண்ட வி ட்வின் எஞ்சின் 70.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
தோற்றத்தில் ஹார்லி டேவிட்சன் வி ராட் பைக்கை நினைவூட்டும் ஹயோசங் அக்குய்லா ஜிவி 650 ஸ்டைலான குரூஸர் பைக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
ரூ.5.5 லட்சம் விலையில் இந்த புதிய குரூஸர் பைக்கை ஹயோசங் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








