பைக்குகளுக்கான நேவிகேஷன் சாதனம்: மேப்மை இந்தியா அறிமுகம்

பைக்குகளுக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை மேப்மை இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மோட்டார்சைக்கிளில் செல்பவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையிலான வசதிகளுடன் இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம் பிரத்யேக வசதிகளை கொண்டிருக்கிறது.

டிரையல்பிளேசர்-2 என்ற பெயரில் இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம் விற்பனைக்கு கிடைக்கும். தொடுதிரை, வாய்மொழி உத்தரவு மூலம் தகவல் பெறும் வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய நேவிகேஷன் சாதனம், பைக் ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என கருதப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

பைக் பேட்டரியிலிருந்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்டது டிரையல்பிளேசர்-2.

எளிதாக பொருத்தலாம்

எளிதாக பொருத்தலாம்

வேண்டும்போது பைக்கின் ஹேண்டில்பாரில் பொருத்தவும், தேவையில்லாதபோது எளிதாக கழற்றி வைத்துக் கொள்ளும் வசதியுடன் கிளாம்ப் கொடுக்கப்பட்டுள்ளது.

புளூடூத் வசதி

புளூடூத் வசதி

புளூடூத் ஹெட்செட் உதவியுடன் வழித்தடங்களை கேட்கவும், வாய்மொழி உத்தரவின் மூலம் செல்ல வேண்டிய இடம் மற்றும் பிற தகவல்களை பெற முடியும். மேலும், 3 மீட்டர் தூரம் வரை சப்போர்ட் செய்யும் என்பதால் பின்னால் அமர்ந்திருப்பவர் மூலம் ஹெட்செட் மூலம் தகவல் பெறலாம்.

டச்ஸ்கிரீன் திரை

டச்ஸ்கிரீன் திரை

8.9 செமீ டச்ஸ்கிரீன் திரை மூலம் மியூசிக், சினிமா, புகைப்படங்களையும் பார்க்க முடியும். Don't Panic software என்ற கணினி மென்பொருளும் பதிவு செய்யப்பட்டு கிடைக்கிறது.

வீட்டு அட்ரஸ்

வீட்டு அட்ரஸ்

இந்த நேவிகேஷன் சாதனத்தில் 50 நகரங்களின் வீட்டு முகவரிகளை கூட துல்லியமாக காட்டும். நாட்டிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகள், 5,000 நகரங்களின் தெருக்கள் மற்றும் சாலைகளின் விபரங்களை இதில் பெறலாம்.

விலை

விலை

ரூ.16,990 விலையில் இந்த புதிய நேவிகேஷன் சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது. கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேப்மை இந்தியா தளத்தில் ஆர்டர் செய்தும் வாங்கிக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2013, 10:52 [IST]
English summary
MapmyIndia has launched a new GPS navigator device called Trailblazer 2 which is specially designed for bikes. The new device comes with 8.9-cm wide touch screen and includes all the entertainment features like music, photos and movies on the go. The MapmyIndia Trailblazer 2 is priced at Rs. 16,990.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+