அமெரிக்காவில் ஜப்பானிய பைக்குகளை குறி வைத்து தூக்கும் திருடர்கள்!
அமெரிக்காவில் ஹோண்டாவின் இருசக்கர வாகனங்கள்தான் அதிக அளவில் திருடப்படுவதாக புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இருசக்கர வாகனங்கள் திருடு போனது குறித்த புள்ளி விபரங்களை அமெரிக்க குற்றவியல் தகவல் மையம் வெளியிட்டுள்ளது. அதில், ஜப்பானிய பிராண்டு இருசக்கர வாகனங்கள்தான் அதிக அளவில் திருடு போவது தெரியவந்துள்ளது.

புள்ளிவிபரம்
கடந்த ஆண்டில் மொத்தம் 46,061 இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, தயாரிப்பாளர்கள், மாகாணம், நகரம் என பல வகைககளில் பிரித்து புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருடர்களின் மோகம்
திருட்டு போன வாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டதில், முதல் 4 இடங்களில் ஜப்பானிய பிராண்டுகளே இடம் பெற்றுள்ளன.

ப்ரியமான ஹோண்டா
திருடர்களின் முதல் குறி ஹோண்டா பைக்குகள் மீதுதான் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 9,082 ஹோண்டா பைக்குகள் திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடு போகும் வாகனங்களில் ஹோண்டா பைக்குகளை முதன்மையாக இருக்கிறது.

யமஹா
ஹோண்டாவுக்கு அடுத்து யமஹா(7,517 பைக்குகள்) இரண்டாம் இடத்தையும், சுஸுகி( 7,017 பைக்குகள்) மூன்றாம் இடத்தையும், கவாஸாகி(4,839 பைக்குகள்) நான்காம் இடத்தையும் வகிக்கின்றன.

ஹார்லிக்கு...
திருடு போகும் பைக்குகளின் பட்டியலில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் 5ம் இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டு 3,755 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் திருட்டு போயுள்ளன.

மாகாணம்
அதிக அளவில் பைக்குகள் திருடு போவதில் கலிஃபோர்னியா மாகாணம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 6,082 பைக்குகள் திருடு போயுள்ளன. இதற்கடுத்து, புளோரிடா இருக்கிறது. டெக்சாஸ் மற்றும் வட கரோலினா மற்றும் இண்டியானா ஆகிய மாகாணங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

நியூயார்க்
நகரங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டதில், பைக்குகள் அதிகம் திருடு போவதில் நியூயார்க் நகரம் முதலிடத்தில் இருக்கிறது. லாஸ் வேகாஸ், சாண்டியாகோ, இண்டியானபொலிஸ் மற்றும் மியாமி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கிளைமேட்
குளிர்காலத்தை விட கோடை காலத்தில்தான் இருசக்கர வாகன திருட்டு கன ஜரூராக நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








